தபால் சேவையை பொருத்தமான வகையில் மாற்றியமைக்க வேண்டும்.
தபால் சேவையினை நவீன உலகத்திற்குப் பொருத்தமான வகையில் இலங்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும்படி மாற்றியமைக்க வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தபால் சேவையுடன் மக்கள் நெருங்கும் வகையில் அதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தபால் தினத்தை முன்னிட்டு அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றபோதே பிரதமர் இந்த விடயத்தைக் கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் விஜித்த ஹேரத்தும் உரையாற்றினார். ஒரு காலத்தில் தபால் சேவை ஏனைய சேவைகளைவிட முன்னிலை வகித்தது.
எனினும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் தற்போது தபால் சேவையின் தேவை குறைவடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
நவீன வர்த்தக பொருளாதாரத்துடன் ஒன்றிணைந்த நிறுவனங்கள் தற்போது முன்னிலையடைந்துள்ளன. நவீன தொழில்நுட்பத்துடன் தபால் சேவையினையும் முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.
தபால் சேவையினை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.