தபால் நிலையங்களில் வாக்குச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள மக்களுக்கு வாய்ப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான 40 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு விநியோகம் நடவடிக்கை எதிர்வரும் சனிக்கிழமையுடன் நிறைவடையும்.
அந்தத் திகதிக்கு பின்னர், வீடுகளுக்குச் சென்று வாக்குச் சீட்டு விநியோகிக்கப்பட மாட்டாது. எனினும் தேர்தல் தினம்; வரை தமது வாக்குச்சீட்டுகளை,
தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.