தபால் மூல வாக்களிப்பு தொடர்பான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளது. விண்ணப்பங்களை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் மீண்டும் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூல வாக்களிக்க விண்ணப்பித்த அதிகாரிகளின் பணியிடங்கள் தற்போது ஏதோ ஒரு வகையில் மாறியிருக்கலாம்.
எனவே, அனைவரும் தபால் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியது அவசியம். இந்தநிலையில், பொதுத் தேர்தலுக்காக ஆயிரத்து 100 கோடி ரூபா தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.