தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இன்றாகும். இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து,
தமது பிரதேசத்தில் தேர்தல் தெரிவத்தாட்சிக்கு அனுப்ப வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தபால்மூல வாக்களிப்பிற்கான பெயர்பட்டியல் தற்சமயம் சகல மாவட்ட செயலாளர் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம், மற்றும் கிராம சேவையாளர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தவிரவும் அரச நிர்வாக அமைச்சு, தொழில் அமைச்சு, கல்வியமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், பிரதான தபாலகம், மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சு, மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை சகல மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், கிராம சேவையாளர் பிரிவுகளில் பெற்றுக்கொள்ள முடியும். தேர்தல் ஆணைக்குழுவின் இணையத் தளத்திலும் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.