தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்ட வகையில் இடம்பெறும் ; ப.சத்தியலிங்கம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசியமாநாடு திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடி தேசிய மாநாடு ஜனவரி மாதம் 27, 28ஆம் நாட்களில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
மாநாடு மு.ப.10.00 மணிக்கு நடைபெறும் என ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவம் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகின்றது