தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த குகதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் குகதாசனுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் சகப் வேட்பாளராக சிறிநேசனுக்கு ஆதரவாக 104 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பை சேர்ந்த எட்டுப் பேர் குகதாசனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எட்டு மேலதிக வாக்குகளால் அவர் வெற்றிபெற்றுள்ளார்.