தற்போதைய ஜனாதிபதி தொலைநோக்குடன் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு
தற்போதைய ஜனாதிபதி சரியான தலைமைத்துவத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி கட்சி சார்பற்ற வேட்பாளர் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கொங்கஹகே தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்காலப் பணிகளை ரஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே நிர்வகிக்க முடியும்.
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவருக்கு மட்டுமே மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.