திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கையை வெளிப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி
திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என வினவியபோது, அதற்கு பதில் அளிக்காத அனுரகுமார திசாநாயக்க,
தன்னை விவாதத்திற்கு அழைப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனுரகுமார திஸாநாயக்க தம்முடனான விவாதத்திற்கு முன்னர், சுனில் ஹதுன்நெத்தி மற்றும் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் தனியான விவாதம் நடத்தி தனது சரியான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், தான் குறிப்பிட்டது போல், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் காணொளி உரையாடலுக்காக அனுரகுமார திஸாநாயக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக சஜித் பிரேமதாஸவையும் அழைக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்தார். குருநாகல் மாவட்ட புத்திஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடன் இடம்பெற்ற கலந்துiராயடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
எண்ணாயிரத்து 900 பில்லியன் ரூபா செலவும், நான்காயிரத்து 900 பில்லியன் ரூபா வருமானமும், நான்காயிரம் பில்லியன் ரூபா பற்றாக்குறையுடனும் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வரவு செலவுத் திட்டத்தை அனுரகுமார திஸாநாயக்க, ஏன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்தார் என விடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
இதனால், சரியான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.