தெற்கு யெமனின் கிழக்குப் பகுதியில் வான்வழித் தாக்குதல்.
தெற்கு யெமனின் கிழக்குப் பகுதியில் மூன்று முறை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தலைமையிலான நாடுகள் கூட்டாக இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு மரிப் மாகாணத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக யெமனில் உள்ள ஹவுதி செய்தித் தொடர்பாளர் யஹ்யா ஷரியா அறிவித்து, இரண்டு மணித்தியாலத்தின் பின்னர், இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யெமன் அல்மசீரா தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.