தேயிலை தொழிற்துறையை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி பணிக்குழாம் – சஜித்
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேயிலைச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார். காலி – பத்தேகமயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களைப் பாதுகாப்பதற்காக, 50 கிலோ எடை கொண்ட உர மூடை ஐயாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.
அத்துடன் தேயிலைச் செய்கையினைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி பணிக்குழாம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
களுகங்கை, ஜின்கங்கை, நில்வளா கங்கை ஆகிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி காலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.