உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாவிட்டால், உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து, புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சிகளுக்கு அப்பால், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டங்களை தயாரிப்பது அவசியமாகும். அரசாங்கம் விவசாயத்துறையை அழித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டினார்