தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமையுடன் நிறைவு.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்பின்னர் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளருக்கு
ஆதரவாளர் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது
அரச அல்லது தனியார் வாகனங்களில் வேட்பாளர்கள் அல்லது கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்தின்படி, தேர்தல் நடைபெறும் தினத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.