தேர்தல் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் பற்றி விசாரிக்க குழு
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான அபாரத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சிந்தக்க குலரட்ன தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் விதிமுறைகளை மீறியதாக நிரூபிக்கப்படும் எவரும் மூன்று இலட்சம் ரூபாவிற்கும் ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் இடைப்பட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டும்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் நடந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர்களின் வருமான செலவின அறிக்கை பெற்றுக்கொள்ளப்படும்.
இந்த அறிக்கையிலுள்ள தகவல்கள் உண்மையானவை என்பதை சகல வேட்பாளர்களும் சத்தியப்பிரமாண கடதாசி மூலம் ஊர்ஜிதம் செய்வது அவசியம்.
பொய்யான தகவல்கள் இருக்கும்பட்சத்தில், குறித்த வேட்பாளருக்கு எதிராக முறையிட்டு சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வாக்காளர்களுக்கு உண்டென மேலதிக தேர்தல் ஆணையாளர் சிந்தக்க குலரட்ன குறிப்பிட்டார்.