நாட்டில் 38 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள்.
நாட்டில் இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் 38 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இதில் 25 வீதமான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில் டெங்குத் தொற்றுக்கு இலக்காகி, 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
பத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோய் அபாய எச்சரிக்கை நிலையில் காணப்படுவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
000