நாட்டை தாரைவார்க்க SLPP ஒருபோதும் இடமளிக்காது.
ஆயிரக்கணக்கான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட நாட்டுக்குள் எந்தவொரு தனிப்பட்ட சக்தி மேலெழுவதற்கோ நாட்டை தாரைவார்க்கவோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவிதத்திலும் இடமளிக்காது என்று அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அரச சேவையை பலப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறந்த யோசனைகளை அமுல்படுத்தவுள்ளது. அரச சேவைக்கு தேவையான போதுமான ஊழியர்கள் மட்டுமே உள்ளீர்க்கப்பட வேண்டும்.
நவீன தொழில்நுட்பம் அரச சேவையில் அறிமுகப்படுத்தல் வேண்டும். 2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்கும் போது இந்த நாடு மிக வறிய நாடாக இருந்தது.
ஆனால் 2015ஆம் ஆண்டு இந்த நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்கும் போது பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சியைப் பெற்ற செழிப்பான நாடாக இந்த நாடு இருந்தது.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டை பொறுப்பேற்கும் பொழுது நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
பிட்டபத்திர பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும பொழுதே திரு.நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.