நாட்டை முன்னேற்றப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் அறிவிப்பு
குருணாகல் மாவட்ட பிக்குமார் ஆலோசனை சபையின் அங்கத்தவர்களான ஆயிரம் பிக்குமாருக்கு தானம் வழங்கும் நிகழ்ச்சி எதிர்க்கட்சி;த் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் பங்களிப்புடன் இன்று குருணாகலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய திரு.சஜித் பிரேமதாஸ, சகல வணக்க ஸ்தலங்களையும் ஐக்கியப்படுத்தி புத்த சாசனத்தை பாதுகாக்கும் வகையில் கிராமத்தை வளர்ச்சி காண செய்து நாட்டை அபிவிருத்தி செய்யும் பாரிய திட்டமொன்றை அமுலாக்கப் போவதாக தெரிவித்தார்.
இலங்கையின் சகல வணக்க ஸ்தலங்களுக்கும் சூரிய சக்தி மின்வலுவை வழங்கும தேசிய திட்டம் அமுலாக்கப்படும். விகாரைகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் ‘தாபரிப்பு பெற்றோர்’ முறையை அமுலாக்கி அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் திரு.சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.