நான்காயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் தொடர்பில் விசேட விசாரணை
அரச நிறுவனங்கள் பலவற்றில் காணாமல் போயுள்ள நான்காயிரத்திற்கும் அதிக வாகனங்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க கணக்காய்வாளர் டபிள்யூ.பி.சி.விக்ரமரட்ன தெரிவித்தார்.
இதுதொடர்பான அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து அரச நிறுவனங்களையும் தழுவக் கூடியவாறு இந்த விசேட விசாரணை முன்னெடுக்கப்படும்.
இந்த வாகனங்களை உண்மையில் எவர் பாவித்துள்ளனர் என்பது குறித்து தகவல்கள் சேகரிக்கப்படும் என்று அரச கணக்காய்வாளர் மேலும் தெரிவித்தார்.