நாமல் ராஜபக்ஷவும் ராஜபக்வாதிகளும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் அரசாங்கம் கவிழாது. எனவே அரசாங்கத்தை கலைக்க வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கத் தயார்! என்ற தலைப்பில் இன்று (14) ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வெளிநாட்டில் உள்ள லான்சா எம்.பி இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி எம்.பி.க்களை முதன்முறையாக சந்தித்த போது, பாராளுமன்றத்தை கலைப்பீர்களா என மொட்டு எம்பிக்கள் கேட்டனர். நீங்கள் கூறும்போது அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைத்து விடுவேன் என்று ஜனாதிபதி பதிலளித்தார்.
எனவே அமைச்சரவை அமைச்சர்கள் விவகாரத்தில் தற்போதைக்கு அரசாங்கத்தை கலைக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த எம்.பி., நாமல் ராஜபக்ஷ குழுவிற்கு தற்போது மொட்டுவில் உள்ள 25 எம்.பி.க்களின் ஆதரவுகூட இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ராஜபக்சவாதிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் பிரச்சினை இல்லை. ஏனெனில் அவர்கள் சென்றால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அதிகமான எம்.பி.க்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். ஐமச, சுதந்திரக் குழு, உத்தரா குழுவில் இருந்து அரசாங்கத்துக்கு வரக் காத்திருக்கும் எம்.பி.க்களுக்கு அந்த பசில் குழுதான் தடையாக இருக்கிறது என லான்சா எம்.பி கூறினார்.
“கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் நாட்டை கட்டியெழுப்ப வந்த போது ஔிந்திருந்தவர்கள் தற்போது ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர். இவை தெளிவாக பாசாங்குத்தனமான வேலைகள். எப்போதெல்லாம் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜனாதிபதியின் காலை இழுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இலங்கைக்கு வந்தவுடன் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவேன் என்று நிமல் லான்சா எம்.பி மேலும் தெரிவித்தார்.