நியாயமான வரிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் – நாமல் ராஜபக்ஷ
நியாயமற்ற வரிக் கொள்கைக்குப் பதிலாக எளிய மற்றும் நியாயமான வரிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச சொத்துக்களை விற்று, நியாயம் அற்ற விதத்தில் வரி விதித்து அரசாங்கத்தின் வருமானத்தை பெருக்கும் மனநிலை தவிர்க்கப்பட வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். மக்களுக்கு தாங்கக்கூடிய வரிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.
மறைமுக வரிக்குப் பதிலாக நேரடி வரிக் கொள்கையை முன்னெடுப்பது அவசியமாகும். அதற்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஷ கூறினார்.