நிலவு பூமியை விட்டு விலகிச் செல்வதாக தெரிய வந்துள்ளது.
நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகிச் செல்வதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அதன்படிஇ பூமியிலிருந்து ஆண்டுக்கு சுமார் 3.8 சென்றிமீற்றர் வீதம் நிலவு விலகிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பூமியில் ஒரு நாளைக்கு 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பின்னரே மாறும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாகும்.