நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு
மாத்தறை நில்வளா கங்கையை அண்மித்தப் பகுதியில் இன்று அதிகாலை குறிப்பிடத்தக்க மழை கிடைத்துள்ளதென நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்த, அக்குரெஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புறுபிட்டிய, திஹகொட, மாத்தறை, தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை நிலவக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சக்குரா தில்தாரா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கவனம் செலுத்துமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.