பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பல்வேறு நாடுகளில் கணக்கு வைத்திருக்கும் அல்லது திட்டங்களில் முதலீடு செய்த அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் குறித்து அரசுக்கு உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.
இது அரசியல்வாதிகளாலும் பாதாள உலகக் குற்றவாளிகளாலும் திருடப்பட்ட அல்லது வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்ட பணமாகும், மேலும் பணத்தை மீட்பதற்கும் பறிமுதல் செய்வதற்கும் புதிய சட்டத்தை உருவாக்க அரசாங்கம் நம்புகிறது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய சட்டத்தை உருவாக்கி 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக நீதி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.