பலமான நாட்டை உருவாக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை கௌரமாக கொண்டாடுமாறு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, தமது ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.
எனினும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு அவ்வாறான சேறு பூசும் செயற்பாடுகளை முன்னெடுக்காது. எதிர்கால சந்ததிக்காக பலமான நாட்டை உருவாக்குவது ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.