2024ஆம் ஆண்டுக்காக இலங்கைப் பல்கலைக்கழகங்களில் 41,000 மாணவர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னர் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட பாடத்திற்கு ஏற்ப நான்கு மாதங்கள் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும், அதற்கான புதிய வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மனிதநேயப் பிரிவில் விரைவில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்களின் நிர்வாகச் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், துணைவேந்தருக்கு மேலதிகமாக பிரதி உபவேந்தர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.