பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா? வெளியானது அறிவிப்பு
எரிபொருளின் விலை குறைந்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி ஆட்டோ டீசல் விலை குறைக்கப்படாததே இதற்கு காரணம் என அவர் தெரிவித்தார்.
மேலும் இந்நாட்களில் ஆட்டோ டீசல்களின் தரத்தில் சிக்கல் உள்ளதுடன் இது குறித்து தெரிவித்தும் தீர்வு எட்டவில்லை எனவும் அவர் கூறினார்
அத்துடன் இரண்டு மாதங்களாக 27 ரூபாய் நஷ்டத்தில் பஸ்கள் இயக்குவதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார் .