பாரம்பரிய அரசியல்வாதிகளால் நாட்டை காப்பாற்ற முடியாது.
பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காலி – அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த தேர்தலை விட, இம்முறை ஜனாதிபதி தேர்தல் சிறப்பானதாக அமையும் என அவர் தெரிவித்தார்.
இம்முறை மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிப்பது அவசியமாகும். அதற்காக மக்களுக்கு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.