பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் – லலித் டி சில்வா
ஆரோக்கியமான வளமான கிராமம் மற்றும் புத்திசாலித்தனமான நாடு என்ற தொனிப்பொருளைக் கொண்டு தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் லலித் டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். நாட்டில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு பதிலாக நேரடி ஜனநாயகம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.