பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை
பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்ற அலுவல்களுக்கான தெரிவுக்குழு கூடிய போது, இதுதொடர்பான தீர்மானம் எட்டப்பட்டது.
இதன் பிரகாரம் நாளை மறுதினம் முற்பகல் 9.00 மணி தொடக்கம் 10.30 வரை வாய்மூல வினாக்களுக்கான பதில்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.
மாத்தறை நில்வளா கங்கை சார்ந்ததாக நிர்மாணிக்கப்பட்ட அணையால் எழுந்துள்ள நிலைமை பற்றி ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் ஆராயப்பட உள்ளதென பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.