பிளவுபட்ட நாடு எதிர்கால சந்ததியினருக்காக மீண்டும் இணைக்கப்படும் – எதிர்கட்சி தலைவர்
பிளவுபட்ட நாடு எதிர்கால சந்ததியினருக்காக மீண்டும் இணைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன, மத, கட்சி என்ற ரீதியில் பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பிளவுபட்ட நாட்டில் எதிர்கால சந்ததியினருக்கு பங்களிக்க முடியாது.
அடுத்த தலைமுறைக்கு வலுவான நாட்டை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் வளங்களை அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்போது நாடு இழந்த ஒவ்வொரு வளமும் மீட்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.