பூகம்பம் பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது பற்றி மக்களுக்கு விளக்கம் அளிப்பது அவசியமாகும். இந்தியாவில் ஏற்படும் பூகம்பங்களால் இலங்கைக்கும் தாக்கம் ஏற்படலாம். பூகம்பத்திற்கு ஈடுகொடுக்காத கட்டடங்கள் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியமாகும். சர்வதேச நிறுவனங்களின் வழிகாட்டல்களுக்கு அமைய தற்சமயம் பூகம்பத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.