பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டொலிடொவிற்கு (யுடநதயனெசழ வுழடநனழ) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்தே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து, அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அலெஜான்ட்ரோ டோலிடொ 2001ஆம் ஆண்டில் இருந்து 2006ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
அவருக்கு எதிராக பதவி துஷ்பிரயோகம், ஊழல் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்தே, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.