பெரும்போகத்திலும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படவுள்ளது.
தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியத்தை வழங்க அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. இதற்கமைய, அரச உர நிறுவனத்தின் ஊடாக 50 கிலோகிராம் எடை கொண்ட இரசாயன உரத்தை நான்காயிரம் ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் பெரும்போக நெற் செய்கையாளர்களுக்கும் உர மானியத்தை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஹெக்டெயருக்கு 15 ஆயிரம் ரூபா பெறுமதியான உர மானியம் வழங்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.