Home » பேதங்கள் கடந்து நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு தருமாறு சஜித் கோரிக்கை

பேதங்கள் கடந்து நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு தருமாறு சஜித் கோரிக்கை

Source

இலங்கையில் தற்பொழுது மோதலுடன் கூடிய அரசியல் யுகம் ஒன்று உருவாகி இருக்கிறது. கோபம், போட்டி, பகை, இனவாதம், மத வாதம் பழங்குடிவாதம், நிறவெறி சாதிப் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். நாடு வங்குரோத்து அடைந்து 220 இலட்சம் பேரும் தற்பொழுது கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். தொடர்ந்தும் இனவாதத்துடன் செயல்படாமல் எல்லோரும் ஒன்றிணைந்து பொறாமை, வைராக்கியம், அதிகாரப் பேராவல் போன்றவற்றில் இருந்து விலகி நாட்டை கட்டி எழுப்ப ஒற்றுமையோடு இணைந்து செயற்படுவோம். இவ்வாறான பிரிவினைகளோடு நாம் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் இந்த நாட்டு மக்கள் குறித்து சிந்திப்பதில்லை. பொதுமக்களின் உயிர் நாடி தொடர்பில் புரிந்துணர்வின்றி செயற்படுகின்றனர். நல்லிணக்கம் சகோதரத்துவம் நட்பு என்பவற்றின் ஊடாக நாட்டு மக்கள் என்ற ரீதியில் ஒன்றாக இணைந்து நாட்டைக் கட்டி எழுப்ப சக்தியை உருவாக்க வேண்டும்.

பிரிந்துள்ள நாடு பல்வேறு காரணங்களுக்காக அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள இந்த சமூகத்தை ஒற்றுமையின் ஊடாக கட்டியெடுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைமாறு அனைவரிடமும் நட்புக்கரம் நீட்டுகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பதினோறாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (23) மாலை கண்டி, அக்குரனை நகரில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் போலவே அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன மத மொழி குல ரீதியில் பிரித்து உருவான கடந்த அரசாங்கம் நாட்டு மக்களின் வாழ்க்கையே சீரழித்து இருக்கிறது. இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி வீதிக்கிறங்கி போராடியுள்ளது. நல்லடக்கம் செய்வதா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது மக்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே வீதிக்கிறங்கியது. மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி விதிக்கிறங்கியது. சிலர் வரப்பிரசாதங்களுக்கு அடிமைப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பாராளுமன்றத்திலே அடிப்படைவாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடந்து கொண்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எவரும் மதங்களை நிந்திக்கக் கூடாது. இந்த நாட்டில் எவருக்கும் இனங்களையும் மதங்களையும் நிந்திக்க உரிமை இல்லை. அனைத்து இனங்களையும் மதங்களையும் மதிக்க வேண்டும். இது அனைவரினதும் நாடாகும். பிரிந்துள்ள வீழ்ச்சி அடைந்துள்ள இந்த நாட்டை தாம் ஒன்றிணைப்பதோடு இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டை ஆட்சியாளர்கள் பூரண உரிமமாக எழுதிக் கொண்டமையால் நாடு வங்கரோத்து அடைந்துள்ளது. புதிய பொருளாதார நோக்குடன் நாடு கட்டி எழுப்பப்படும். புதிய பொருளாதார நோக்குடன் நாட்டை கட்டி எழுப்புவோம். அனைவருக்கும் அபிவிருத்தியின் பிரதிபலன்கள் கிடைக்கும் வகையில் சமூக சந்தை பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம், மீண்டும் நாட்டை கட்டி எழுப்புவோம். எமது நாட்டில் ஒருசில வரையறுக்கப்பட்ட துறைசார் நாமங்கள் இருக்கின்றன. கொரியாவில் பல்வேறுபட்ட துறைகளில் துறைசார் நாமங்கள் இருப்பதால், எமது நாட்டையும் அந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார். இரண்டு குண்டுகளை உள்வாங்கிக் கொண்ட ஜப்பானும், யுத்தத்தால் அழிந்து போன வியட்னாமும் கோத்திர யுத்தத்தினால் அழிந்து போன ருவாண்டாவும், இன்று உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாறி இருக்கின்றன. அதனால் துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லை, முடியாது, பிறகு பார்ப்போம் என்கின்ற சிந்தனை போக்கை இல்லாது செய்து, ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு ஒரே தேசியம் என்ற வகையில் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டைக் கட்டி எழுப்பி, புதிய கைத்தொழில் யுகத்தை நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image