பொருளாதாரப் பிரச்சினைகள் ஐந்து வருடங்களுக்குள் தீர்க்கப்படும்.
நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் தீர்வு காணப்படுமென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் பட்சத்தில் நாட்டின் எதிர்காலம் பற்றி ஒருபோதும் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் சீர்செய்து சகலரும் வாழக்கூடிய நாட்டை கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பியதாகவும் அவர் கூறினார்.
நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தைப் பாதுகாத்து, முன்னோக்கிச் கொண்டு செல்ல வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.