மக்கள் நம்பிக்கை கொள்ளும் நாட்டை உருவாக்க தயார்
இலங்கையை பல தசாப்தங்களாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள், வீழ்ச்சியடைந்த நாட்டையே இறுதியில் மிச்சப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வழமைக்கு மாறான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
மெல்சிரிபுரவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். இளைஞர் – யுவதிகளின் கனவுகள் சீர்குலைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன.
ஊடகங்களே இதற்கு முன்னர் தலைவர்களை தீர்மானித்தன. எனினும், இம்முறை அவ்வாறான நிலை மாற்றம் அடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி நாட்டின் அரச அதிகாரத்தைப் பெறும் ஆரம்ப நாளாக, எதிர்வரும் 21ஆம் திகதி உதயமாகும் என்றும் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மக்கள், அரசியல்வாதிகள் தொடர்பில் நம்பிக்கை மற்றும் கௌரவம் கொள்ளும் நாட்டை உருவாக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.