மக்கள் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதாக அனுரகுமார அறிவிப்பு
தனது நிர்வாகத்தின் கீழ், மின்சார கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் வாழக்கூடிய நாட்டொன்றை உருவாக்கப் போவதாகவும் கல்கிஸ்ஸையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.