மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களை சேர்ந்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக விடுத்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 7.30 வரை அமுலில் இருக்கும்.
காலி மாவட்டத்தில் நாகொட, எல்பிட்டிய ஃ களுத்துறை மாவட்டத்தில் வலலாவிட்ட, மத்துகம, தொடங்கொட, புளத்சிங்கள, ஹொரண ஃ மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் மட்டத்திலான மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் நியாகம ஃ கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட ஃ மாத்தறை மாவட்டத்தில் பிட்டபத்தர ஆகிய பிரதேச செயலாளர் பிரவுகளுக்கு முதலாம் மட்டத்திலான மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.