மத்திய கலாச்சார நிதியில் மோசடி நடக்கவில்லை, தேர்தலில் வெற்றிபெற ராஜபக்ச செய்த தந்திரம் அது!
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிய குழுவொன்றை நியமித்ததாகவும், அந்த குழுவிற்கு ஹரிகுப்த ரோஹனதீர, கோட்டாபாய ஜயரத்ன மற்றும் காமினி சரத் எதிரிசிங்க ஆகியோரை நியமித்ததாகவும் ஆனால் அவர்களில் எவரும் கையொப்பமிடவில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேக மீது அவதூறு பரப்புவதே கோட்டாபய ராஜபக்சவின் இந்த அறிக்கையை தயாரிப்பதன் நோக்கம் எனவும், முழுமையான அரசியல் அவதூறு மற்றும் தனிப்பட்ட சேறுபூசல் இங்கு இடம்பெற்றுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புகாரை கையாள போதுமான ஆதாரங்கள் மற்றும் உண்மைகள் இல்லை என்று, அது மேலும் தொடராது. இலஞ்ச ஆணைக்குழு இவ்வாறு கூறியதையடுத்து, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி வசந்த ஜினதாச, ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி டபிள்யூ. பி. குணபால மற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி எம். பி. வீரகோன் போன்றவர்களின் தலைமையில் வேறொரு குழுவை நியமித்து அறிக்கை தயாரித்தாலும் அந்த அறிக்கை வெளியிடப்படாது எனவும், அந்த அறிக்கையில் முன்னாள் கலாசார அலுவல்கள் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாததே இதற்குக் காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கலாசார அலுவல்கள் அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் இன்று (6) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.