Home » மனுஷ, ஹரீன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமை: இரத்து செய்வதற்கு கட்சி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது

மனுஷ, ஹரீன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமை: இரத்து செய்வதற்கு கட்சி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது

Source

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டப்பூர்வமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய, ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என இரண்டு அமைச்சர்களும் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தனர்.

அதை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற குழு இது தொடர்பான தீர்ப்பை அறிவித்தது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image