நாட்டின் எந்தவொரு நீதிமன்றத்தாலும் வழங்கப்படும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்குவதில்லை என்று ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதுபற்றிய அவரது தீர்மானத்தை, சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். போதைப் பொருள் குற்றச்சாட்டின் கீழ், மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2019ஆம் ஆண்டில் தீர்மானித்திருந்தார். இதனை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரித்த போது ஜனாதிபதியின் இந்த நிலைப்பாடு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.