மறைந்த ஹுனுபிட்டிய கங்காராம விஹாராதிபதியின் இறுதிக் கிரியை: விசேட போக்குவரத்து திட்டம்.
மறைந்த ஹுனுப்பிட்டி கங்காராம விஹாரையின் கலபொட ஞானிஸ்ஸர தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை விஹாரை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அதற்காக விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை கொழும்பை அண்டிய பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி தர்மபால மாவத்தை, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொம்பனித்தெரு ஆகிய வீதிகளுக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இறுதிக் கிரியை நிகழ்வுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று முதல் கங்காராம விஹாரைக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை மற்றும் ஜினரத்தன மாவத்தை சந்தியில் மாத்திரமே செல்ல முடியும்.
டோர்சன் வீதியில் இருந்து ஜினரத்தன மாவத்தைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜினரத்தன மாவத்தையில் போக்குவரத்து ஒருவழியாக மட்டுமே அமைந்திருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.