மாலியில் அவசர நிலை பிரகடனம்.
மாலியில் தேசிய அனர்த்த நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்துவரும் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடும் மழையினால், ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 70 லட்சம் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.