மின்கட்டணத்தை அதிகரிக்காவிடின் நாட்டில் மீண்டும் வரிசையுகம்தான் – அமைச்சர் காஞ்சன
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்துக்குச் செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
‘அண்மையில் கட்டண திருத்தம் செய்யப்பட்ட பின்னர் இலங்கை மின்சார சபைக்கு மாதாந்தம் சுமார் 35 பில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கின்றது. ஜனவரி மாதத்தில் மட்டும் மின்சார விநியோகத்துக்கான நிலக்கரிக்கு 38.45 பில்லியன் ரூபா தேவை. மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல் 25ஆம் திகதிக்கு முன்னதாகக் கொள்முதல் செய்ய வேண்டும்’ என்றார்.
TL