Home » மீண்டும் IMF உடன் இணைந்து செயற்படுவது குறித்து இன்னும் ஆலோசனை

மீண்டும் IMF உடன் இணைந்து செயற்படுவது குறித்து இன்னும் ஆலோசனை

Source

அடுத்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) மீண்டும் ஒரு வேலைத்திட்டத்தில் இணைவதா என்பது குறித்து இன்னும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு எதிர்பார்க்கப்படும் மட்டத்தை எட்ட வேண்டியுள்ளதுடன், கடன் தரப்படுத்தலில் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையைப் பேணிக்கொண்டு, அடுத்த கட்டமாக பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அடைவது என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது எமது கடன் தரப்படுத்தல் முன்னேற்றமடைந்துள்ளது. இருப்பினும், நாம் இன்னும் ஒரு படி முன்னேற வேண்டும். எமது வெளிநாட்டு நாணயக் கையிருப்பு எதிர்பார்க்கப்படும் மட்டத்தை மேலும் நெருங்க வேண்டும்.

இந்தக் காரணிகளை முழுமையாகச் சரிசெய்ய முடிந்தால், எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும். எனினும், உலகளாவிய ரீதியிலும் சில நிச்சயமற்ற நிலைமைகள் காணப்படுகின்றன.

கடந்த எட்டு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளோம். இதன்படி, இந்த ஆண்டில் எரிபொருள் இறக்குமதிக்காக மொத்தம் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனக் கணிக்க முடிகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் நான்கு ஆண்டு இலக்கு, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதாகும். அந்த வகையில், பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவிலான நிலைத்தன்மையை நாம் அடைந்துள்ளதாக நான் கருதுகிறேன்.

இப்போது எமது அடுத்தகட்டத் திட்டம், இந்த நிலைத்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அடைவது என்பதாகும்.

பொருளாதார வளர்ச்சிக்காக புதியதொரு உடன்பாட்டை எட்ட முடிந்தால், அதற்குத் தயாராக இருக்கிறோம். எமது பொருளாதாரத் துறையை நன்கு அறிந்த குழுக்களுடன், எத்தகைய வேலைத்திட்டத்தில் இணைய வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடி வருகிறோம்.

அதன் அடிப்படையிலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். இதற்காக இன்னும் சுமார் ஆறு மாதங்கள் எமக்குக் கால அவகாசம் உள்ளது.

எனினும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்பை முழுமையாகக் கைவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் நாம் இல்லை. கட்டாயம் அதனுடன் இணைய வேண்டும் என்ற முடிவுக்கும் வரவில்லை. இந்த விடயத்தில் நாம் திறந்த மனப்பான்மையுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நேற்று (12) நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

The post மீண்டும் IMF உடன் இணைந்து செயற்படுவது குறித்து இன்னும் ஆலோசனை appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both