மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பொருளாதார மூலமாக மாற்றத் திட்டம்
மீள் புதுப்பிக்கத் தக்க வலுசக்தித் துறையினை எதிர்வரும் தசாப்தத்தில் நாட்டின் பிரதான பொருளாதார விருத்தியாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆடைத் தொழில் துறை இலங்கையின் பிரதான பொருளாதார வேலைத்திட்டமாகக் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் மீள புதுப்பிக்கத்தக்க சக்திவளத் துறையினை தன்னிறைவான வகையில் மாற்றுவது அரசாங்கத்தின் திட்டம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கையின் முதலாவது இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமான கரவெலப்பிற்றி மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 350 மெகா வொட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள முடியும். இதன் இரண்டாவது கட்டத்தை அடுத்த வருடத்தின் முதல் அரையாண்டில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
2050ஆம் ஆண்டை அடையும்போது, காலநிலை மாற்றம் தொடர்பான வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கினை பூரணப்படுத்துவதற்கு, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.