Home » முதியோர் சேமிப்பு கணக்கிற்கு 15 சதவீத வட்டி – சஜித் பிரேமதாஸ

முதியோர் சேமிப்பு கணக்கிற்கு 15 சதவீத வட்டி – சஜித் பிரேமதாஸ

Source

முதியோர்களுக்கான சேமிப்பு கணக்கில் 15 சதவீத வட்டி நிச்சயமாக வழங்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைவருக்கும் அக்ரஹாரா காப்புறுதித் திட்டம் செயல்படுத்தப்படும். வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்குவதற்கு முழு அதிகாரம் கொண்ட ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கெங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகள் குறைக்கப்படும். அதன்படி, முதலில் ஜனாதிபதியின் செலவுகள் குறைக்கப்படும். தமது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ஜனாதிபதியாக செயற்படுவதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image