லாஸ் பால்மாஸ் கிரான் கனேரியா சர்வதேச திரைப்பட விழாவின் 23வது பதிப்பு (Festival de cine de Las Palmas de Gran Canaria) இன்று, ஏப்ரல் 27ஆம் திகதி, ஐந்து கண்டங்களிலும் உள்ள திரைப்படங்களைக் காட்சிப்படுத்தியது.
பிரசன்ன விதானகேயின் இந்தோ-இலங்கை தயாரிப்பான ‘பெரடைஸ்’ இந்த மதிப்புமிக்க நிகழ்வில் பார்வையாளர்களுக்கான ஜூரி விருதைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கொரியாவில் நடந்த பூசன் திரைப்பட விழாவில், கிம் ஜி-சியோக் விருது என அழைக்கப்படும் சிறந்த திரைப்பட விருதை, ‘பெரடைஸ்’ சர்வதேச அளவில் பெற்றது. கூடுதலாக, இது பிரான்சில் நடந்த ஆசிய சினிமாவின் வெசோல் சர்வதேச திரைப்பட விழாவில் இளைஞர் நடுவர் மன்றத்தின் விருதைப் பெற்றது.
மேலும், ஆசிய சினிமா அகாடமி நடத்திய ஆசிய திரைப்பட விழாவில் ‘பெரடைஸ்’ சிறந்த திரைப்படம் மற்றும் நான்கு விருதுகளைப் பெற்றது, இது உலகளாவிய திரைப்பட அரங்கில் ஒரு தனித்துவமான தயாரிப்பாக அதன் நிலையை உறுதிப்படுத்தியது.