மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
நாடளாவிய ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 677 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 9 ஆயிரத்து 305 டெங்கு தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 300 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் வட மாகாணத்தில் 4 ஆயிரத்து 726 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் இதுவரை 37 ஆயிரத்து 613 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் முதல் பத்து நாட்களில் மாத்திரம் 968 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.