யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரால் தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், தனது உயிரை காப்பாற்றுமாறு தஞ்சம் அடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (2024.02.05) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழ மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், தனது உயிரை காப்பாற்றுமாறு தஞ்சம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வட்டுகோட்டை பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞனே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடளித்துள்ளார்.
போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டில் சிவில் உடையணிந்த பொலிசார் வீதியில் வைத்து தன்னை தாக்கியதாகவும், பின்னர் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சிறிய அறைக்குள் வைத்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சில மாதங்களின் முன்னர் சித்தங்கேணியை சேர்ந்த இளைஞன் ஒருவரை அடித்து கொன்ற குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை பொலி நிலையத்தை சேர்ந்த பொலிஸார் சிலர் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.