ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கலாவெவ அலுவலகம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கலாவெவ தொகுதியின் தலைமை அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பேதங்களை மறந்து ஜனாதிபதியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரம் தொடர்பிலும் துமிந்த திஸாநாயக்க கருத்துத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு வாக்குறுதியையும் வழங்க மாட்டாது என இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு எதிராக செயற்படும் குழு நாட்டுக்கு எதிரான குழுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.